முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரியை மு.க.ஸ்டாலினின் எதிர் முகாமில் உள்ள அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். இது அரசியல் காரணம் தா என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

முன்னதாக கடந்த 6-ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னையில் மு.க.அழகிரி நடத்திய பேரணி தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைத்துள்ளது என பாராட்டினார்.

இதையும் படிங்க பாஸ்-  அழகிரிக்கு திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் கொடுக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடி!

இதனையடுத்து தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவின் அமைச்சர் செல்லூர் ராஜூவும் மு.க.அழகிரியை புகழ்ந்துள்ளார். நேற்று மதுரை சோலை அழகுபுரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, அழகிரியுடைய பணி எப்படிப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும்.

இதையும் படிங்க பாஸ்-  பாசிச பாஜக ஒழிக; தமிழிசை வாக்குவாதம்: மாணவி சோஃபியா கைது!

அழகிரி பல வருடங்களாகக் கட்சியில் எந்தப் பதவியில் இல்லாமல் இருந்தாலும் அவர் தனது தந்தைக்கு மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி ஒரு பேரணியை நடத்தி முடித்துள்ளார். அவருடைய எதிர்காலம் என்பது போகபோகத்தான் தெரியும் என அழகிரிக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இவ்வாறு எதிர் தரப்பினர் அழகிரியை புகழ்ந்து ஸ்டாலினுக்கு எதிராக தூண்டி விட முயற்சிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.