Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் செல்வராகவன் மருத்துவமனையில் அனுமதி! தீபாவளி ரேஸிலிருந்து பின்வாங்குகிறதா என்.ஜி.கே

செல்வராகவன் மருத்துவமனையில் அனுமதி! தீபாவளி ரேஸிலிருந்து பின்வாங்குகிறதா என்.ஜி.கே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. இந்த படமானது தீபாவளிக்கு ரசிகா்களுக்கு விருந்து படைக்கும் வகையில் வெளியாக இருந்தது. ஆனால் தீபாவளி ரேஸில் இருந்து தற்போது இந்த படம் பின்வாங்கி உள்ளது. தீபாவளிக்கு வெளியாக இருந்த சூர்யாவின் என்.ஜி.கே படம் தற்போது தள்ளி போய் உள்ளது.

இயக்குனர் செல்வராகவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. படப்பிடிப்பின் போது செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறிய மருத்துவ பரிசோதனை தான் எடுத்துக்கொண்டேன். நான் மிகவும் நலமாக உள்ளேன். தற்போது மீண்டும் பணிக்கு திரும்பி விட்டதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் என்.ஜி.கே படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் படத்தின் வெளியீடு குறித்து அவர் எதுவும் அதில் குறிப்பிடவில்லை. என்.ஜி.கே படத்தின் ரீலிஸ் குறித்து தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து எந்தவொரு அறிவிப்பு வரவில்லை. தீபாவளிக்கு என்.ஜி.கே ரிலீஸாகாது என்று கூறப்படுவதால் இது சூர்யா ரசிகா்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.