நடிகர் அதரவா நடிப்பில் அவரே தயாரித்து வரும் படம் ‘செம போத ஆகாதே’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் மார்ச் மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மிஷ்கின் – ராம் நடித்த ‘சவரக்கத்தி’ படத்தை ரிலீஸ் செய்த க்ரிக்ஸ் சினி கிரியேஷன் நிறுவனம் இந்த படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது.

அதர்வா, மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இவர்தான் அதர்வா அறிமுகமான ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் அதர்வாவுக்கு பிரேக்கிங் படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது