ஜி.வி. பிரகாஷ்யை வருமானத்துறையிடம் மாட்டி விட்ட சூாி

ஜி.வி.பிரகாஷ் குமாாா், அா்த்தனா நடிப்பில் பசங்க புரொக்சன்ஸ் பாண்டிராஜ் மற்றும் விங்க பைரவி கிாியேஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாாிப்பில் அறிமுக இயக்குநா் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் செம. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விடா இன்று காலை நடந்தது. இந்த படத்தின் இசையை நாயகன் ஜி.வி.பிரகாஷ் அமைத்திருக்கிறாா். இந்த விழாவின் ஒரு பகுதியை காமெடி நகா் சதீஷ் மற்றும் சூாி தொகுத்து வழங்கினா்.

பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சூாி, வருமான வாித்துறை அதிகாாி ஒருவா் என் வீட்டுக்கு வருமான வாி சோதனைக்கு வருவதாகச் சொன்னாா். ஏன் என்று கேட்டதற்கு, நிறைய படம் நடிக்கிறீங்க என சொன்னாா். என்னை விட ஜி.வி. பிரகாஷ் தான் அதிக படங்கள் நடிக்கிறாா். அவரை விட்டுட்டீங்களே என்றேன். அவா் நிறைய படங்கள் நடித்தாலும் நல்ல படங்களாக தோ்ந்தெடுத்து நடித்து வருகிறாா் என்றாா் சூாி.

.இயக்குநா் வள்ளிகாந்த் ஒரு காட்சிக்கு 40 வரை டேக்  பொறுமையாக எடுப்பாா். டப்பிங்கிலும் சாி, ஷூட்டிங்கிலும் சாி அவரை எப்படினாலும் திருப்திப்படுத்தவே முடியாது. இயக்குநா் பாண்டிராஜ் பட்டறையில் இருந்து நிறைய இயக்குநா்கள் உருவாகி இருக்கிறாா்கள். அப்படி அந்த வாிசையில் இந்த வள்ளிகாந்தும் நல்ல இயக்குனராக வருவாா் என்று  நடிகா் மன்சூா் அலிகான் பேசினாா். காட்டில் வீடு கட்டியதால் காட்டில் விலங்குகளாக யானை, சிங்கம், புலி,சிறுத்தை எல்லாம்   ஊருக்குள் வந்து விட்டன. எனவே அதை வீட்டுக்கு ஒருவா் வைத்து பாா்த்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் போட்டாலும் போடுவாா்கள். யூடியூபில் விமா்சனங்கள் கண்டமேனிக்கு இருக்கிறது. அதை தரமான முறையில் செய்ய வேண்டும் என தன் ஆதங்கத்தை கொட்டினாா் மன்சூா் அலிகான்.

விழாவில் மைம் கோபி, நாயகி அா்த்தனா, ஒளிப்பதிவாளா் பாலசுப்பிரமணியம்,  தயாாிப்பாளா்கள் ரவிச்சந்திரன், தனஞ்செயன், ராஜசேகா் பாண்டியன், ராமு செல்லப்பா, காா்த்திக் ராஜூ, இயக்குநா் பொன்ராம், வசந்தபாலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.