பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகர் சென்ராயனுக்கு குழந்தை பிறந்துள்ளது.

படங்களில் சிறு சிறு வேடங்களில் தலை காட்டினாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாலேயே சென்ராயன் அதிகம் பிரபலமடைந்தார். திருமணம் ஆகி 4 வருடமாகியும் குழந்தை இல்லாத நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார்.

அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த அவரின் மனைவி ‘நீ அப்பா ஆகப்போறே’ என சந்தோஷமாக கூற ‘நான் அப்பா ஆயிட்டேன்’ என உரக்க கத்திக்க்கொண்டே ஆனந்த கூத்தாடினார்.

இந்நிலையில், தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.