Home சற்றுமுன் செண்ட்ராயன் பதிலை ஏற்க மறுத்த பிக்பாஸ்

செண்ட்ராயன் பதிலை ஏற்க மறுத்த பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நித்யா வெளியேற்றப்பட்டார். ஆனால் மக்கள் ஓட்டு என்பது பெயர் அளவில் தான் இருக்கிறது. மக்கள் ஓட்டு போட்டு நித்யாவை காப்பாற்றி தான் வருகிறார்கள். ஆனால் பிக்பாஸ் காப்பாற்றியதோ யாஷிகா தான். ஏன் என்று தெரியவில்லை பிக்பாஸ் ஓட்டு என்பதை பெயரில் அளவில் வைத்து விட்டு அவரே ஒருத்தரை எவிக்ஷன் செய்து விடுகிறார். அதற்கு ஏன் மக்கள் ஒட்டு என்று வைக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் நெட்டிசன் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையில் இந்த வார எவிக்ஷன் நடைபெறுகிறது. அதற்கான ப்ரொமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்தவார எவிக்ஷன் பற்றிய ப்ரொமோ வீடியோவில் பிக்பாஸ் இந்த வாரம் யாரை நாமினேட் செய்ய போகிறீர்கள் என்று போட்டியார்களிடம் கேட்கிறார். இந்த பிக்பாஸ் வீட்டில் ஆர்வமில்லாமலும், மேத்தனமாகவும் நடக்கும் இரு நபர்களை நாமினேட் செய்ய வேண்டும் என்று அறிவிக்கிறார் பிக்பாஸ். அதில் சென்ட்ராயன் கூறும் பதிலை ஏற்க மறுத்து விட்டார் பிக்பாஸ். நீங்கள் கூறிய காரணம் சரியாக இல்லை என்று கூறி அதை ஏற்கவில்லை பிக்பாஸ். இந்நிலையில் பார்வயைாளர்கள் போட்ட ஓட்டையே ஏற்காமல் மாற்றி நித்யாவை வெளிய அனுப்பியவர் தான் இந்த பிக்பாஸ் என்று நெட்டிசன் காட்டத்தில் இருக்கின்றனர். அப்புறம் எப்படி சென்ட்ராயன் கூறும் பதிலை ஏற்பார் பிக்பாஸ் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த ப்ரொமோ வீடியோவை பார்த்த நெட்டிசன், கடுப்பில், நீங்க பிக்பாஸ் வீட்டில் எந்தவொரு ரூல்ஸ் வேணும்னாலும் வச்சிக்கோங்க. ஆனா எங்களை ஏன் ஓட்டு போட சொன்னீங்க. நாங்க ஓட்டு போடத ஒரு பெண்ணை எப்படி நீங்க காப்பாற்றினீா்கள். எங்களுக்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும், அது வரை நீங்க பேக்விஜய்டிவி தான் என்று கமெண்ட் செய்துள்ளார்.