பெண்கள் படுக்கைக்குத்தான் லாயக்கு! நான் சொன்னது தப்பே இல்லை: பிரபல நடிகர்

11:10 காலை

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூன் தயாரிக்கும் ‘ராரண்டோய் வேதுகா சுதம்’ என்ற படத்தில் அவரது மகன் நாகசைதன்யா மற்றும் ராகுல் ப்ரித்திசிங் ஆகியோர் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பழம்பெரும் நடிகர் சலபதிராவ் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய சலபதிராவ், ‘பெண்கள் படுக்கைக்கு மட்டுமே சரியானவர்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு நாகார்ஜூன் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த கருத்துக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும், அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், நாங்கள் பெண்களை மதிப்பவர்கள் என்றும் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த சலபதிராவ், அதே நேரத்தில் அந்த விளக்கத்திலும் மீண்டும் ஒரு சர்ச்சைக்கருத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது;

நான் யார் மனதையும் காயப்படுத்த நினைக்கவில்லை. நான் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். பெண்கள் ஆபத்தானவர்களா என்று கேட்டதால் கோபப்பட்டேன். பாம்புகளுடன் படுப்போமா? இல்லை. அதனால் தான் பெண்கள் ஆபத்தானவர்கள் இல்லை, எனவே அவர்களுடன் படுக்கிறோம் என்ற அர்த்தத்தில் கூறினேன். இதில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை என்று சலபதிராவ் கூறினார். மேலும் சில சேனல்கள் தெலுங்கு தெரியாமல் நான் சொன்னதை புற்றுநோய் போன்று பரப்பிவிட்டார்கள். நான் பெண்ணை ஒருபோதும் அவமதிக்க மாட்டேன். நான் பெண்களை தாயாக, சகோதரியாக மதிப்பவன் என்று ராவ் கூறியுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393