வட சென்னை என்ற படத்தை நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிமாறன் இயக்கி சிம்பு நடிக்க இருப்பதாய் செய்தி வெளியானது. இதை வெற்றிமாறனும் அப்போது டுவிட்டரில் பகிர்ந்தார். பின்பு சிம்புவை வைத்து இயக்க முடியாமல் நீண்ட இடைவேளை விட்டு  தனுஷை வைத்து இயக்கி வருகிறார்.

வட சென்னையின் பல வருட ரத்த வரலாற்றை சொல்வது போல் இப்படம் அமைகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் வரும் காட்சிகளை வைத்து பார்க்கும்போது வரும் காட்சிகள் அதிக வன்முறை இருப்பது போலவும் வசனங்கள் யாரையோ குறிப்பிடுவது போலவும்.

இவ்வளவும் போக ஐஸ்வர்யா ராஜேஸை லிப் டூ லிப் கிஸ் தனுஷ் அடிப்பது போலவும் காட்சிகள் உள்ளது.

டீசரிலேயே இப்படி இருந்தால் படம் முழுக்க எப்படி இருக்கும் இது சென்சாரின் கத்தரியில் இருந்து தப்புமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.