Connect with us

செய்திகள்

சூப்பர் சிங்கர் வெற்றியாளர் செந்தில் நடிக்கும் கரிமுகன்

Published

on

விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்கு பிறகு இந்த பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது.. யூடியூப்பில் இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். உலகம் முழுதும் பிரபலமான இந்த குழுவினர் கரிமுகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள்.. செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக .காயத்ரி என்ற கேரளா பெண் நடிக்கிறார்.

மற்றும் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் இவர்களுடன் இயக்குனர் செல்ல தங்கையாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ விமல் புரொடக்சன்ஸ் சார்பாக T.சித்திரைச்செல்வி , M.செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்குகிறார் செல்ல தங்கையா.

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், நானும் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி மற்றும் எங்கள் குழுவினர் நாட்டுப்புற பாடல்கள் பாடி நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்.
ஏற்கெனவே செந்தில் கணேஷை நாயகனாக்கி திருடு போகாத மனசு என்ற படத்தை இயக்கி வெளியிட்டேன். அதற்கு பிறகு மீண்டும் அவரை வைத்து கரிமுகன் படத்தை இயக்குகிறேன். படத்தின் கதை பற்றி சொல்ல வேண்டுமானால்

முகம் தெரியாத இரண்டு பேருக்குள் நடக்கிற பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து முகம் தெரிந்த இரண்டு பேருக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதும் அதிலிருந்து அவர்கள் வெளியே வந்தார்கள் என்பதை கமர்ஷியல் காமெடியாக சொல்லி இருக்கிறோம் என்றார்.

vignesh
செய்திகள்1 min ago

நியூயார்க்கில் காதலுனுடன் பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா – வைரல் புகைப்படங்கள்

attack
செய்திகள்19 mins ago

சிறுநீர் குடிக்க வைத்து தலித் வாலிபர் அடித்துக் கொலை – 4 பேர் கைது

செய்திகள்1 hour ago

முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடிக்கும் டிக்டாக் மிருணாளினி

செய்திகள்2 hours ago

எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: கமல் விழாவில் அரசியல் பேசிய ரஜினி

செய்திகள்3 hours ago

கணவருடன் நீச்சல் குளத்தில் நஸ்ரியா: வெளியான வைரல் புகைப்படம்

செய்திகள்3 hours ago

போதை மருந்து கொடுத்து நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர் தலைமறைவு

செய்திகள்3 hours ago

வணக்கம்டா மாப்ள!.. ரிடென்ஷன்ல ஜெயிச்சுட்டேன் – டிரெண்டிங்கில் அசத்திய பஜ்ஜி….

செய்திகள்3 hours ago

சின்னத்திரையில் ரம்யா பாண்டியன் – ஏன் இந்த திடீர் முடிவு !

asin wedding
செய்திகள்3 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்4 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

murder
செய்திகள்4 days ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்4 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்3 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

Trending