முதலமைச்சர் பழனிச்சாமிக்கு சவால் விட்ட நடிகர் செந்தில்?

தினகரன் அணியின் ஆதரவாளரும் சமீபத்தில் அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியை ஏற்றவரும் நடிகருமான செந்தில் இன்று காலை சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில், ‘இப்போதும் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாதான். இந்த பிரச்சனைகளை எல்லாம் அவர் பார்த்து கொள்வார். மேலும் முதல்வராக எடப்பாடி பழனிசாமியை நாங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்றால் அவர் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும். அதற்கு தயாரா? என்று சவால் விட்டார்.

மேலும் அதிமுக எம்பி ஒருவரை ஒருமையில் பேசிய செந்திலை செய்தியாளர்கள் தட்டிக்கேட்டபோது அப்படித்தான் பேசுவேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.