விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும்  சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர்  செந்தில்கணேஷ், இவரது மனைவி ராஜலட்சுமி .
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த தம்பதி ஜோடியாக நாட்டுப்புற பாடல்கள் பாடி பெரும் புகழ் பெற்றனர். மக்களும் இவர்களுக்கு பெரும் ஆதரவு கொடுத்தனர். இந்நிலையில் செந்தில்கணேஷ்-ராஜலட்சுமி பெயரில் பெயரில் பல சமூகவலைத்தள பக்கங்கள் உள்ளது. இதில் காலை வணக்கம் நண்பர்களே, இந்த போட்டோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, எங்க பாட்டு பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க போன்ற போஸ்ட்கள் வரும்.
இதுபற்றி இவர்கள் கூறுகையில், இந்த பக்கங்கள் எல்லாம் எங்களுடையது அல்ல என்று கூறியுள்ளனர். மேலும் சிலர் எங்களிடமே நேரடியாக ஏன் இதுபோன்றெல்லாம் போட்டு விளம்பரம் தேடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். இது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
தயவு செய்து இதுபோல் செய்யாதீர்கள் என்று ஆதங்கப்பட்டுள்ளனர். மேலும் நாங்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதே இல்லை என்றும் கூறியுள்ளனர்.