பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வாரம் தோறும் ஒருவா் வெளியேற்றப்பட்டு வருகிறார். இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேற்ற படுவதாக செய்திகள் கசிந்தது.ஆனால் செண்ட்ராயன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவ்வளவு நாட்களாக எந்தவித சுவாராசியமும் இல்லாமல் இருக்கிறது என்ற ஒரு கருத்து பார்வையாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. 85 நாட்கள் கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர் இவரா?

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ஐனனி, மும்தாஜ், சென்ராயன், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இனிமேல் புதிய போட்டியாளர்கள் யாரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்பில்லை. அதனால் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் கட்டாயமாக வெளியேற்றபடுவது உறுதி. எனவே சென்ராயனை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ள ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேற போவதாக நம்பத்தகுந்த செய்திகள் வந்தன. பொதுமக்களும் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருந்தன்ர். கமல்ஹாசன் கூட அவரை கடுமையாக சாடினார். ஆனால் என்ன செய்வது? பாழாய்போன டிஆர்பி உள்ளதே. அதனால் ஐஸ்வர்யாவுக்கு பதில் செண்ட்ராயன் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.