பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வாணி ராணி’ உள்பட பல சின்னத்திரை தொடர்களிலும், ஒருசில தமிழ் சினிமாவிலும் நடித்தவர் நடிகர் கோவை தேசிங்கும். இவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சபரிமலையில் உள்ள சரங்குத்தி என்ற இடத்தில் இவர் தங்கியிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றதாகவும், ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாகவும் அவரது உறவினர் தெரிவித்துள்ளனர்.

திறமையான நடிகர்களில் ஒருவராகிய கோவை தேசிங்கு அவர்களின் இழப்பு சின்னத்திரைக்கு பெரிய இழப்பு என நடிகர், நடிகையர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.