திரைத்துறை போலவே மக்களால் பெரிதும் பார்க்கப்படும் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல் தொடராகும். அதில் நடிக்கும் பலரும் தங்களது திறமைகளின் மூலம் சினிமாவிலும் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில், சின்னத்திரையில் தனது இயல்பான நடிப்பினாலும், உடல்மொழியாலும் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நடிகர் விஜயராஜ். இவர் மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனார்.

இதையும் படிங்க பாஸ்-  கலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல்!

இந்நிலையில், 43 வயதான விஜயராஜ் பழனியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரின் மரண செய்தி கேட்டு சின்னத்திரை பிரபலங்கள் பலர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.