தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன் ஆகிய சீரியல்களில் நடித்து கொண்டிருப்பவர் மகாலட்சுமி

காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு சச்சின் என்ற மகன் உள்ளார். தனது மகனின் முதல் பிறந்த நாளை பாங்காக்கிலும், 2வது பிறந்த நாளை சிங்கப்பூரிலும் கொண்டாடிய மகாலட்சுமி, விரைவில் வரவுள்ள மூன்றாவது பிறந்த நாளை மலேசியாவில் கொண்டாட முடிவு செய்துள்ளார்.

தன்னுடைய மகன் 20 வயதில் 20 நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றும், அதுவே தனது ஆசை என்றும் மகாலட்சுமி கூறியுள்ளார்.