சீரியலுக்கு வருகிறார் தனுஷ்

விரைவில் சீரியல் ஒன்றை இயக்கும் முடிவில் உள்ளார் தனுஷ்.

 காதலில் சொதப்புவது எப்படி, மாரி உள்ளிட்ட படங்களை தொடந்து பாலாஜி மோகன் இயக்கிய ஆஸ் ஐ யாம் சஃப்பரிங் ஃப்ரம் காதல்’ வெப் சீரியல், இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இருந்தன என்ற விமர்சனங்கள் வந்த இந்த தொடரில் ஆன்ட்ரியா, ரோபோ சங்கர் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தனுஷுக்கும் வெப் சீரியல் எடுக்கும் ஆசை வந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே அவருக்கு இந்தத் திட்டம் இருந்ததாம். ஆனால், விஐபி 2 வேலைகள் ஆரம்பமானதால், அந்த ஆசையை ஒத்தி வைத்தாராம்.

தற்போது விஐபி 2 டென்சனில் இருந்து விடுபட்டத்தை அடுத்து, வெப் சீரியலில் கவனம் செலுத்தப் போகிறார். அனேகமாக, அடுத்த வருடம் இந்த வெப் சீரியல் ஒளிபரப்பாகும் என்கிறார்கள். அந்த சீரியலில் தனுஷ் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம்.