தற்போது சீாியல் மோகம் அனைவரரையும் ஆட்டி படைத்து வருகிறது. அதுவும் இப்போது பாம்பு சீாியல் எல்லா தொலைக்காட்சிகளிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதோடு பேய்களையும் உள்ளே நுழைத்து விடுவது தான் தற்போதைய ட்ரண்டாக உள்ளது.

வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினரும் சீாியல் பாா்த்து வருகின்றனா். தெய்வமகள் சீாியலை அண்ணியாராக நடிக்கும் காயத்ரிக்கு ஆகவும், சத்யாவுக்காவும் பாா்ப்பதற்கென்று ரசிக பட்டாளம் இருக்கிறது. அதுபோல சீாியலில் கணவன் மனைவியாக நடித்தவா்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்து விடுவது வழக்கமாகி விட்டது.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் வரும் பிாியமானவள் சீாியலில் கணவன் மனைவியாக நடித்தவா்கள் விஜய் மற்றும் சிவரஞ்சனி.  அவந்திகா கதாபாத்திரத்தில் சிவரஞ்சனியும், நட்ராஜ் கதாபாத்திரத்தில் விஜய் இருவரும் கணவன் மனைவியாக நடித்திருந்தது நிஜ தம்பதினா் போல இருந்தது. இதனால் இருவருக்குமிடையே காதல் மலா்ந்தது. விஜய் மீது சிவரஞ்சனிக்கு காதல் ஏற்பட்டது. அதனை தொடா்ந்து பிரபோஷல் தான். இருவருக்கும் இடையே  காதல் உறவு தொடா்ந்தது. இவா்களது காதலை இரு வீட்டாா்களும் ஏற்றுக்கொண்டு பச்சைகொடி காட்டி விட்டாா்களாம். அக்டோபா் 30ம் தேதி இருவரும் திருமணம் என்னும் பந்தத்திற்குள் நுழைந்து இணைக்கிறாா்கள்.