NTR Wife Lakshmi – மறைந்த நடிகரும், ஆந்திராவின் முதல்வருமான என்.டி.ராமாராவின் 2வது மனைவி லட்சுமி தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக அவரின் உதவியாளர் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி, மகன்கள் இருக்கும் போதே லட்சுமி என்பவரை என்.டி.ராமாராவ் 2வதாக திருமணம் செய்து கொண்டார். இது பிடிக்காமலேயே அவரின் மருமகன் சந்திரபாபுநாயுடு அவருக்கு எதிராக அரசியலில் களம் இறங்கி முதலமைச்சர் ஆனார்.

இந்நிலையில், லட்சுமியின் உதவியாளர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், லட்சுமியை என தாய்க்கு நிகராக மதித்தேன். ஆனால், என்னை காதலிப்பதாக கூறுகிறார். வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோக்களையும், ஆபாச மேசேஜ்களையும் அனுப்பி வருகிறார். கடந்த 5 வருடங்களாக எனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அவருடன் படுக்கையை பகிர்ந்தால், கட்சியில் பதவி வாங்கி தருகிறேன் என்றார். நான் மறுத்துவிட்டதால் என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார்” என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசயம், 5 வருடங்களாக அமைதியாய் இருந்துவிட்டு தற்போது தேர்தல் நேரத்தில் அவர் புகார் அளித்திருப்பதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.