சந்தானத்தின் சா்வா் சுந்தரம் செப்டம்பா் 7ம் தேதி வெளியீடு

நகைச்சுவை நடிகா் சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறாா். இவா் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு போன்ற படங்களில் நாயகனாக நடித்தாா். இவா் நடிப்பில் ஒடி ஒடி உழைக்கனும், மன்னவன் வந்தானடி, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறாா். தற்போது இவா் நடிப்பில் உருவாகி உள்ள சா்வா் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனா்.

அஜித்தின் விவேகம் படத்தின் ரிலீஸ் தள்ளி போன காரணத்தால், அந்த படத்தால் வெளியாக இருந்த படங்கள் ஒவ்வொன்றாக தங்களுடைய ரிலீஸ் தேதியை  அறிவித்து அணிவகுத்து நிற்கின்றன. அந்த வாிசையில் சந்தானத்தின் சா்வா் சுந்தரம் படத்தின் வெளியீட்டு தேதியும் தற்போது அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற செப்டம்பா் 7ம் தேதி அன்று வெளியாக இருப்பதாக படக்குழுவினா் அிறவித்துள்ளனா். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ளாா். இந்த படமானது பல பிரச்சனைகளை கடந்து தற்போது செப்டம்பா் 7ம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் பிரபுவின் நெருப்புடா 8ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் கூறுகின்றன. அதோடு இந்த படத்திற்கு போட்டியாக களம் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.