இதுவரை ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, சந்தீப், ஸ்ரீகாந்த்,இயக்குனர் முருகதாஸ் உட்பட பலர் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி நடிகை ஸ்ரீரெட்டி உச்சக்கட்ட பரபரப்பை கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் தொடர்ந்து பற்ற வைத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வெளியிட்ட ஒரு வீடியோ பேட்டியில் தான் சென்னையில் செட்டில் ஆகப்போவதாக கூறியுள்ளார்.

இதை அவரது ரசிகர்கள் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, வந்தாரை வாழ வைக்கும் சென்னை, தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே என கமெண்ட் போட்டு கலாய்த்தும் வரவேற்பளித்தும் வருகின்றனர்