பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர்கள் தாக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதனையடுத்து நேற்று இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  இரும்புத் திரைக்கு எதிராக வழக்கு: சோகத்தில் விஷால் ரசிகர்கள்

உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவர் வேறொரு வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் ஒருவரை சந்திக்க கடந்த 7-ஆம் தேதி ஹாப்பூர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் வழக்கறிஞர் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் தன்னை காப்பாற்றவருமாறு அந்த பெண் குரல் எழுப்பினார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த வழக்கறிஞரை அடித்து உதைத்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் தடவி போட்டோ வெளியிட்ட பெண்! அதிர்ச்சி காரணம்!

பின்னர் அந்த பெண் தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அந்த வழக்கறிஞர் மீது வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக தனது வாக்கு மூலத்தை பதிவு செய்ய நீதிமன்றத்துக்கு வந்த பெண் மீது அங்கு கூடியிருந்த வழக்கறிஞர் கும்பல் ஒன்று கடும் தாக்குதல் நடத்தியது. பின்னர் காவலர்கள் வந்து அந்த கும்பலிடம் இருந்து அந்த பெண்ணை மீட்டனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 20 பேர் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.