டோல்லிவுட்டில் விஜய் தேவர்கொண்டாவிற்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் அது அர்ஜூன் ரெட்டி ஆகும். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதனால் பிற மொழிகளின் ரீமேக் உரிமையை வாங்க மிகப் பெரிய அளவில் போட்டியும் நிலவி வந்தது.

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டா கோபம் அதிகம் உள்ள இளைஞனாக நடித்து இருந்த நிலை இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகனான துரூவ் நடித்து வரும் நிலையில் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நடிக்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தமிழில் வர்மா என்ற பெயரில் அர்ஜூன் ரெட்டி திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பாலா இத்திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

இது குறித்துப் பேட்டி அளித்து இருந்த விஜய் தேவர் கொண்டா இந்தியில் ஷாகித் கபூரின் நடிப்பினை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும், இந்தி, தமிழ் என இரண்டு மொழிகளிலும் எப்படி இவர்கள் நடிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.