Shah Rukh khan appreciate vijay sethupathi – நடிகர் விஜய் சேதுபதியை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பாராட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்து பலரின் பாராட்டையும் பெற்றவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் ஆஸ்திரேலியா மெல்போன் நகரில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியும், அப்படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவும் சமீபத்தில் கலந்து கொண்டனர். மேலும், பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கான் உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

அந்த விழாவில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஜய் சேதுபதி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் அங்கு பேசிய ஷாருக்கான், விஜய் சேதுபதியை போல ஒரு சிறந்த நடிகரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை என வெளிப்படையாக பாராட்டினார். இந்தியாவே ரசிக்கும் ஷாருக்கான் தன்னை இப்படி பாராட்டியதால் விஜய் சேதுபதி நெகிழ்ந்து போனார்.

விஜய் சேதுபதியை ஷாருக்கான் பாராட்டிய அந்த வீடியோவை இயக்குனர் சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘இதைக் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.