தற்போது அனைத்து சினிமா பிரபலங்களும் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருவது வாடிக்கை. பாலிவுட் நடிகைகள் தங்களது பிகினி போட்டோக்களையும் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அப்படி அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்துவதோடு சர்ச்சையிலும் சிக்கி விடுவதும் அவ்வப்போது நடக்கும்.

அண்மையில் பாலிவுட் நடிகர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து விட்டனர். தற்போது இன்னொரு பாலிவுட் நடிகர் அந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஷாருக்கான் தனது மகள் சுஹானாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இரு புகைப்படங்களில் ஒன்றில் ஷாருக்கானின் கன்னத்தில் அவருடைய மகள் சுஹானா முத்தம் கொடுக்க முயன்றபோது எடுத்த புகைப்படமும் இருக்கிறது.

வலைத்தளத்தில் இதை பார்த்த நெட்டிசன்கள் அப்பா மகள் என்றால் எப்படி இருக்க வேண்டும். அதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. அப்பா மகள் உறவில் கூட எல்லை வேண்டமா? இந்த மாதிரி புகைப்படத்தை பார்ப்பதற்கே கஷ்டமாக உள்ளது என கடுமையாக விமா்சித்து வருகின்றனர். மேலும் சிலர் இப்படி உள்ள புகைப்படங்களை தயவு செய்து பதிவிடாதீர்கள் என்று கோபமாக திட்டி வருகின்றனர்.