பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் நம்மூர் பிரபல நடிகர் சிவகார்த்திகேயனும் இன்று மாலை ஒரு விழாவில் இணையவுள்ளனர். விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் ஷாருக்கான் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் இணைந்து வெளியிடவுள்ளனர். ஷாருக்கானுடன் இணைந்து ஒரு படத்தின் டிரைலரை வெளியிடும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை இதன்மூலம் சிவகார்த்திகேயன் பெறுகிறார்.

மாதவன், விஜய்சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.