ஒரு காலத்தில் மலையாள திரையுலகை தனது அதிரடி கவர்ச்சியால் கலக்கி மலையாள திரையுலகையே நிலைகுலைய வைத்தவர் ஷகிலா இவரது ஏ சர்ட்டிபிகேட் ரக படங்களால் பெரும்பாலான இளைஞர் கூட்டம் இவரது படங்களையோ மொய்த்தது.

இதனால் கேரளாவில் வெளியான பெரும்பாலான மலையாளப்படங்கள் போதிய வருமானம் மற்றும் வெற்றியை பெற தவறின. ஷகிலாவின் ஆபாசமான படங்களை எதிர்த்து அப்போது மம்முட்டி,மோகன்லால் கூட எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்போது வயது முதிர்ச்சி காரணமாக ஷகிலா அவ்வாறு நடிக்காவிட்டாலும் தமிழ்ப்படங்களில் காமெடி வேடங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.

ஏழ்மையின் காரணமாகவே அது போல படங்களில் நடித்ததாக ஷகிலா குறிப்பிடுகிறார்.

இந்நிலையில் ஷகிலாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரு படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கர்நாடாகவில் தீர்த்த ஹள்ளி என்ற இடத்தில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த படத்தில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சதா என்பவர் நடிக்கிறார் மிக கஷ்டமான சூழ்நிலையில் நடிக்க வந்த ஷகிலாவின் வாழ்க்கையை அப்படியே எடுத்துள்ளோம் அதில் அப்படியே நடித்துள்ளேன் என ரிச்சா சதா கூறினார். கதாநாயகனாக ராஜீவ் பிள்ளை நடிக்கிறார்