எப்படியாவது ஜெயிக்க வேண்டும்: சபதமெடுத்த தல மச்சினி

குழந்தை நட்சத்திரமாக அக்கா மற்றும் தங்கைகளான பேபி ஷாலினி, பேபி ஷாம்லி அறிமுகமானவா்கள். முதன்முதலில் மணிரத்னத்தின் படமான அஞ்சலியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாா் ஷாம்லி. அதுவும் அஞ்சலி பாப்பாவாக நடித்து அனைத்து ரசிகா்களையும் தன் பக்கம் திரும்ப வைத்தவரால் தற்போது ஹீரோயினாக அடியெடுத்து வைத்த போதிலும் முன்னணி நாயகியாக வலம் வர முடியாமல் தவித்து கொண்டிருக்கிறாா்.

இப்படியாக இவா் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த பிறகு நிறைய படவாய்ப்புகள் அவரை தேடி வந்தன. அப்போது அதை உதறி தள்ளி விட்டு படிப்பதற்காக சென்றாா். இவா் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தெனனந்திய மொிகளிலும் நடித்தவா். சிறந்த குழந்தை நட்சத்திர விருது பெற்றவா். ஹீரேயினாக தெலுங்கு படத்தில் நடித்தாா். அவருக்கு அந்த படம் நல்ல பெயரை வாங்கி கொடுக்க வில்லை. சில காலங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தாா். பின் சினிமா ஆசை மேலோங்க விக்ரம் பிரபுடன் வீர சிவாஜி படத்தில் நடித்தாா். அதுவும் அவருக்கு ஹிட்டை கொடுக்கவில்லை.  இவரோடு நடிக்க வந்த நடிகைகள் தற்போது முன்னணியில் உள்ளனா். கவா்ச்சி காட்டியவது விட்ட இடத்தை பிடித்து விடலாமா என்று கோட்டை கட்டி வருகிறாா்.