கஷ்டப்படுபவர்கள் பலருக்கு உதவி செய்யும் அஜித்துக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை சிபாரிசு. தனது மனைவியின் தங்கையாக இருந்தாலும் ஷாம்லிக்கு வாய்ப்பு கிடைக்க இதுவரை அஜித் யாரிடமும் சிபாரிசு செய்தது இல்லை.

இந்த நிலையில் அஜித் கைவிட்ட நிலையிலும் தமிழில் விக்ரம்பிரபுவுடன் நடித்த ‘வீரசிவாஜி தோல்வி அடைந்த நிலையிலும் தற்போது அவர் தெலுங்கு பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார்.

சுந்தர் சூர்யா இயக்கும் ஒரு படத்தில் நாகசவுர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஷாம்லி தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் தனக்கு கைகொடுத்தால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரு ரவுண்டு வருவேன் என்று ஷாம்லி தனக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் கூறி வருகிறாராம்