ஷங்கரின் 2.0 ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு – காரணம் என்ன?

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 2.0. இந்த படம் பல கோடி செலவில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் வில்லனாக பாலிவுட நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படம் வருகிற தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தொழில் நுட்ப காரணங்களால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்‌ஷனை சேர்ந்த ராஜூ மஹாலிங்கம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “உலக தரமான தொழில்நுட்ப வேலைகளை செய்ய வேண்டியிருப்பதால் (வி.எஃப்.எக்ஸ்) தீபாவளிக்கு வெளியாக இருந்த 2.0 படம், ஜனவரி 25ம் தேதி 2018ல் வெளியாக உள்ளது” எனக்குறிப்பிட்டுள்ளார்.