பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகி வந்த ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’; என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒன்றரை கோடி ரூபாய் வரை அட்வான்ஸ் பெற்றுக்கொண்ட நடிகர் வடிவேலு படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இழுத்தடித்தால் தனக்கு ரூ.9 கோடி நஷ்டம் என இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார்

இதையும் படிங்க பாஸ்-  துபாயில் பிரம்மாண்டமாக நடைபெறும் `2.0' இசை வெளியீட்டு விழாவின் சிறப்பம்சங்கள்

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த தயாரிப்பாளர் சங்கம், உடனடியாக இந்த புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு வடிவேலுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இந்த நோட்டீஸை வடிவேலு கண்டுகொள்ளவே இல்லை

இதனையடுத்து ஷங்கர் கொடுத்த அழுத்தம் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ஒன்று படத்தில் நடித்து கொடுங்கள், அல்லது வாங்கிய அட்வான்ஸ், போடப்பட்ட செட்டின் மதிப்பு மற்றும் வட்டி ஆகியவைகளுக்காக ரூ.9 கோடி உடனே கட்டுங்கள் என்று வடிவேலுவுக்கு கெடு விதித்துள்ளதாம் தயாரிப்பாளர் சங்கம். இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேலு, இனிமேல் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதாக உறுதி அளித்துள்ளாராம். இதனையடுத்து அடுத்த வாரம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.