பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் ‘அருவி’ படத்தை பார்த்து தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார். இந்த படம் தமிழில் ஒரு மிகச்சிறந்த படம் என்றும், இயக்குனர் அருண்பிரபுவின் பணி மிகச்சிறந்தது என்றும் அவர் பாராட்டியுள்ளார்

மேலும் நாயகி அதிதிபாலனின் நடிப்பும் இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகைகளின் நடிப்பும் மிக அருமை என்று பாராட்டிய ஷங்கர், படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்/.

ஷங்கரின் பாராட்டால் மகிழ்ச்சி அடைந்துள்ள நாயகி அதிதிபாலன், இதைவிட தனக்கு வேறு எதுவும் தேவையில்லை என்று கூறியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தை சிவகார்த்திகேயன் உள்பட பலர் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.