Shankar dealing with Reliance cinemas – இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் கைவிட்டு விட்டதால், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஷங்கர் டீல் பேசி வருவது வெளியே கசிந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க, ரூ.350 கோடி பட்ஜெட்டில் இந்தியன் 2 படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் முன்வந்தது. ஆனால், ஷங்கரின் பட்ஜெட் குளறுபடிகள், தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பிஸியாக இருப்பது ஆகிய காரணத்தில் அப்செட் ஆன லைக்கா நிறுவனம் ஏறக்குறையை இந்தியன் 2-வை கை விட்டு விடும் முடிவுக்கு வந்து விட்டதாம்.

எனவே, ரிலையன்ஸ் சினிமா நிறுவனத்திடம் படத்தை கைமாற்றும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டுள்ளாராம். ஆனால், முழுக்கதையை படித்து பார்த்த பின்பே படத்தை தயாரிப்பது பற்றி யோசிப்போம் என ரிலையன்ஸ் கூறிவிட்டதால், அதற்கான பணிகளில் ஷங்கர் ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சற்று பின்னோக்கி பார்த்தால், ரிலையன்ஸ் நிறுவனம் சினிமா துறையில் கால்பதித்து தமிழ் படங்களை தயாரிக்க முன் வந்த போது, அவர்களின் முதல் தேர்வு ஷங்கராகத்தான் இருந்தது. ஆனால், கார்ப்பரேட் கம்பெனியான ரிலையன்ஸின் விதிமுறைகள் பிடிக்காததால் ஷங்கர் அதில் ஆர்வம் காட்டவில்லை. தற்போது இந்தியன் 2வை லைக்கா கை விட்டதால், வேறு வழியின்றி ரிலையன்ஸிடம் அவர் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிகிறது.