இந்தியன் 2-வில் இயக்குனர் ஷங்கருக்கு கமல்ஹாசனுக்கு இணையான சம்பளம் பேசப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்திற்காக கமலுக்கு வயதான மேக்கப் போடப்பட்டுள்ளது.

கடந்த 18ம் தேதி இப்படத்திற்கான பூஜை போடப்பட்டு, படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தில் கமலுக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதேபோல், இயக்குனர் ஷங்கருக்கும் அதே 40 கோடி பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.