ரஜினியின் நடிப்பிலும், ஷங்கர் இயக்கத்திலும் உருவான 2.0 படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

இப்படத்தின் பட்ஜெட் ரூ.450 கோடியிலிருந்து 500 கோடி வரை இருக்கும் என செய்தி உலா வருகிறது. படம் வெளியான 5 நாட்களிலேயே இப்படம் 400 கோடி வசூல் செய்ததாக இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் இன்னும் பல கோடிகளை வசூலித்தால் மட்டுமே 2.0 ஒரு வெற்றிப்படமாக அமையும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் 2.0 படக்குழு அதாவது தயாரிப்பு தரப்பு, இயக்குனர் ஷங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து இப்படம் பெற்றி பேசியுள்ளனர். அப்போது, 2.0 படத்திற்கு நீங்கள் சரியான வகையில் விளம்பரம் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இன்னும் வசூல் அதிகரித்திருக்கும். இந்த விஷயத்தில் எனக்கு வருத்தம் உண்டு என தயாரிப்பு தரப்பிடம் ஷங்கர் கூறினாராம்.

அதோடு, அதே லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படம் தொடர்பான விளம்பர பணிகளை நானே கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் அதற்கான பணத்தை மட்டும் கொடுத்து விடுங்கள் என ஷங்கர் கூறிவிட்டாராம். இதை தயாரிப்பு நிறுவனமும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.