சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘2.0’ திரைப்படத்தின் டீசர் நேற்று லீக் ஆகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த டீசரை லீக் செய்தது யார் என்ற விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் ஷங்கர் இன்று ஒரு அதிரடியை செய்துள்ளார்.

இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை தனது டுவிட்டரில் அவர் பதிவு செய்துள்ளார். 5 நிமிடங்கள் 43 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் இந்த படம் எடுக்கப்பட்ட விதம் குறித்த சுவாரஸ்யமான காட்சிகள், படக்குழுவினர்களின் பேட்டிகள் இடம்பெற்றுள்ளது.

நேற்று வெளியான டீசர் உடனடி நடவடிக்கை எடுத்து முடக்கப்பட்டதை அடுத்து ஷங்கர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது