பெரிய பட்ஜெட்டில் ரஜினி எமிஜாக்சன்,அக்ஷய் குமார் நடிப்பில் சங்கா் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.0. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஆடியோவை வெளியிட்டவா்கள் படத்தின் டீசரை வெளியிடவில்லைர. குடியரசு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் வெளியாகவில்லை.

படத்தின் டீசர் பணிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இயக்குநா் சங்கர் தனது ட்விட்டர் வலைத்தளத்தில், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் அது முடிந்ததும் டீஸா் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.