நடிகரும் தேமுதிக கட்சித்தலைவருமான விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன்

இவர் சகாப்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் மதுரவீரன் என்ற திரைப்படத்தில் நடித்தார் இரண்டுமே சரியாக போகவில்லை.

இந்நிலையில் தனது ரசிகர்கள் மட்டுமல்லாது தன்னை சந்திக்க விரும்பும் நபர்கள் தன்னை சந்திக்கலாம் என குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்கி

முகநூல் உள்ளிட்ட சமூவலைதளங்களில் அறிவிப்பு கொடுத்து தனது ரசிகர்கள்,தனது அப்பா ரசிகர்கள், சாதாரண பொதுமக்கள் அனைவரையும் சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார்.

நேற்று கூட சேலத்தில் நடந்த ஒரு விழாவில் இப்படி அனைவரையும் அன்புடன் அரவணைத்து புகைப்படம் எடுத்து கொண்டதை அவரது முகநூல் பக்கங்களில் காண முடிந்தது.

இப்போதைக்கு தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிறந்த ஹீரோவாக வருவதே இவரது லட்சியம் என்றாலும்,

எதிர்காலத்தில் தீவிர அரசியலில் குதிக்கவும் தேமுதிகவில் முக்கிய பொறுப்பு வகிக்கவும் இது போல நிகழ்வுகள் அமையுமோ என பலருக்கும் சந்தேகம் உள்ளது.