பிக்பாஸில் தற்பொழுது புதிதாய் நுழைந்துள்ள ஷாரிக்கை பார்த்ததும் ஐஸ்வர்யா அசடு வழிந்ததை பலரால் பார்க்க முடியவில்லை.

 

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்கு நித்யாவும், ரம்யவும் வருகை புரிந்துள்ளனர். ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பை கொட்டியது தவறு, ஆனால் அதனை யாருமே தடுக்காமல் வேடிக்கை பார்த்தது அதைவிட தவறு என நேற்று நித்யா கூறியிருந்தார். இதனால் ஐஸ்வர்யவிற்கு ஒரு பெட்டி ஐஸை தலையில் வைத்தது போலிருந்தது. இதற்கெல்லாம் ஐஸ்வர்யா திருந்துவாரா? வாய்ப்பே இல்லை என்றே பலர் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  இனிமேல் பிக்பாஸ் இல்லை ; நன்றி ஓவியா - நடிகர் ரகுமான் அதிரடி முடிவு

இந்நிலையில் பிக்பாஸின் இன்றைய புரோமோவில் ஷாரிக் பிக்பாஸினுள் நுழைகிறார் என தெரிகிறது. ஐஸ்வர்யா ஷாரிக்கை கட்டிப்பிடித்து அசடு வழிகிறார். ஆனால் ஷாரிக்கோ ஐஸ்வர்யாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் பல்பு வாங்கிய ஐஸ்வர்யா பிக்பாஸில் எனக்கு பிடித்த ஒரே நபர் யாஷிகா என கூறி சமாளிக்கிறார். இந்த ஜென்மம் எல்லாம் திருந்த போகுதா என ஐஸ்வர்யாவை நெட்டிசன்கள் கிண்டலடடித்து வருகின்றனர்.