சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீசானது. உலகளவில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழகத்தை விட் கேரளாவில் தான் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அப்படிப்பட்ட நடிகர் விஜயின் கோட்டையான கேரளாவில் படத்தில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என செய்திகள் வந்துள்ளது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 47வது பிறந்தநாளின்  சிறப்பாக ‘ஜீரோ’ படத்தின் டிரைலர் வெளியானது. இது இணையதளத்தில் வெளியாகி ஐந்து நாட்களே ஆன நிலையில் கிட்டத்தட்ட 77 மில்லியன் பார்வைகளால் பாரக்கப்ட்டுள்ளது.

விஜயின் ‘சர்கார்’ பட டீசர் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் 30 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது.

தற்பொழுது வரை யூடியூப்பில் சாதனைகள் படைத்த இந்திய திரைத்துறை படத்தின் அனைத்து சாதனைகளையும் ஷாருக்கானின் ‘ஜீரோ’ டீசர் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதன்மூலம், ‘சர்கார்’ படத்தின் டீசர் செய்த சாதனைகளை முறியடித்து, அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படத்தின் டிரெய்லர் என்ற சாதனையை ‘ஜீரோ’ பட டீசர் படைத்துள்ளது.