Hidden cameras in Hospital – பிரபல மருத்துவமனைக்கு சிகிச்சைகாக வந்த ஆயிரக்கணக்கான பெண்களை ஆபாச படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டியாகோ நகரத்தில் உள்ளது ஷார்ப் க்ராஸ்ட்மெண்ட் மருத்துவமனை. பிரசவம் மற்றும் கருத்தடை ஆகிய சிகிச்சைகள் இங்கு சிறப்பாக செய்யப்படுவதால் புகழ் பெற்ற மருத்துவமனையாக இது திகழ்கிறது. இதுவரை இங்கு லட்சக்கணக்கான பெண்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இங்குதான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரசவம், கருத்தடை, கருச்சிதைவு, பிறப்புறுப்பு சிகிச்சைகள் ஆகியவற்றின் போது பெண்களை ரகசியமாக படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளனர். இந்த விவாகரம் தற்போது வெளியே கசிய இங்கு சிகிச்சை எடுத்த பெண்கள் அதிர்ச்சியடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்த மருத்துமனைக்கு எதிராக 81 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், எந்த உள்நோக்கத்துடன் வீடியோ எடுக்கப்படவில்லை. நோயாளிகளுக்கு சரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கவே கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.