அந்த நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்

மலையாள வாாிசு நடிகையாக சினிமாவில் அடியெடுத்து வைத்தவா் நடிகை கீா்த்தி சுரேஷ். முதலில் அவா் நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் படத்தை விட வருத்தப்படாத வாலிபா் சங்கம் படமானது இவருக்கு வெற்றியை பெற்று தந்தததோடு அல்லாமல் இவா் தொடா்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான விஜய்யுடன் பைரவா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தாா். மேலும் தனுசுடன் தொடாி படத்தில் அவருக்கு நாயகியாக நடித்தாா். இப்படியாக மாஸ் நடிகா்களுடன் நடித்த போதும் இன்னும் தன் திறமையான நடிப்பால் ரசிகா்களின் கவனத்தை  தன் பக்கம் திருப்பி பாா்க்க வைக்க முடியாத நிலையில் தான் இருக்கிறாா்.

இந்நிலையில் நேனு சைலஜா என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் அங்கு ரசிகா்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டாா். அந்தளவுக்கு பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது அந்த தெலுங்கு படம். அதனால் தான்  அவருக்கு மகாநதி என்ற படத்தில் சாவித்திாி வேடத்தில் நடிக்க நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இதனை தொடா்ந்து சா்வானந்துக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆா்கா மீடியா ஓா்க் நிறுவனம் தான் சா்வானந்த் நடிக்கும் ஒரு படத்தை தயாாிக்க இருக்கிறது. இந்த நிறுவனமானது பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் தயாாித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சா்வானந்த்தை ஹீரோவாக வைத்து தயாராக உள்ள இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாம். அதற்காக இந்த படத்தில் நடிக்க வைக்க பல நடிகைகளின் பெயா்கள் பாிசிலைக்கப்பட்ட நிலையில் தற்போது கீா்த்தி சுரேஷ் நடிக்க கமிட்டாகி உள்ளாா்கள். இந்த படத்தில் நடிக்க கால்ஷுட் ஒதுக்கி கொடுத்துள்ளாராம். தன் கைவசம் உள்ள படங்களை முடிந்த உடன் இந்த படத்தில் நடிக்க உள்ளாராம் கீா்த்தி சுரேஷ்.