மும்பையைச் சேர்ந்த ‘ஜிஓஎல் ஆப்ஷோர்’ என்ற நிறுவனத்திடம் மாளவியா 20, மாளவியா 7 என்ற இரு சரக்கு கப்பல்கள் இருந்தன. ‘மாளவியா 20’ இங்கிலாந்தின் யார்மவுத் துறைமுகத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை முதல் தொடர்ந்து நிற்கிறது. இந்த கப்பலின் கேப்டன் நிகேஷ் ரஸ்தோகி மற்றும் 3 ஊழியர்களுக்கு கடந்த ஓராண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதால்  கப்பலை விற்பனை செய்வதற்கான அனுமதி உயர் நீதிமன்றத்தில் கப்பல் நிறுவனம் கடந்த மாதம் பெற்றது.

இதையும் படிங்க பாஸ்-  சர்ச்சையில் பத்துமலை முருகன் கோவில் வண்ணப்படிகள்

இதற்கான டெண்டர் வரும் 12ம் தேதி விடப்படுகிறது. இது அந்த கப்பலின் கேப்டன் ரஸ்தோகி மற்றும் ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதுகுறித்து ரஸ்தோகி அளித்த பேட்டியில், ‘‘இந்த கப்பலின் விற்பனை நடவடிக்கைகள் முடிவடைந்தால்தான் நாங்கள் மும்பை திரும்பி எங்கள் குடும்பத்தினரை சந்திக்க முடியும். இது மிகப் பெரிய நிம்மதி’’ என்றார்.