நடிகா், நடிகைகள் சினிமா ஷீட்டிங் முடிந்த பின் கேரவனுக்குள் சென்று ஐக்கியம் ஆகி விடுவது வழக்கம். இதில் தல அஜித் மட்டும் விதிவிலக்காக உள்ளார். ஒய்வு நேரம் கிடைக்கும்போது அஜித்குமார் தனது படத்தில் பணியாற்றும் டெக்னிஷியா்களுக்கு தன் கையாலேயே சுவைமிக்க பிரியாணி செய்து அசத்துவார். படத்தின் இறுதியில் தளபதி விஜய் பிரியாணி செய்து படத்தில் பணியாற்றுபவா்களுக்கு விருந்து அளிப்பது வழக்கம்.

இதில் நடிகைகளை சொல்ல வேண்டும் என்றால் அவா்களுக்கு கேரவனுக்குள் சென்று ஒய்வெடுக்க தான் விரும்புவார்கள். அல்லது செல்பேனில் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இதில் மலையாள நடிகை ஒருவா் மாறுபட்டு இருக்கிறார். அவா் மலையாள ஆக்டா் அனுஷ்ஸ்ரீ ஆறு வருடமாக நடித்து வருகிறார். இவா் மோகன்லால் நடித்த ரெட் ஒயின், பஹத் பாசில் நடித்த டயமண்ட் நெக்லஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மலையாள நடிகை அனுஷ்ஸ்ரீ தற்போது பஞ்சவா்ணதாதா என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் நேராக கேரவனுக்கு சென்று ஓய்வு எடுக்காமல் படக்குழுவினருக்கு சுவையான உணவு தயாரிக்க சமையல் அறைக்கு சென்று விடுகிறார். அங்குள்ள சமையல்காரர்களுடன் சோ்ந்து தோவை சுடுவது போன்ற மற்ற சமையல் வேலைகளை செய்ய ஆரம்பித்து விடுகிறார். இந்த வீடியோவை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார் அனுஷ்ஸ்ரீ.