மணிரத்னம் படம் என்றால் ரசிகா்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். தற்போது செக்கச் சிவந்த வானம் படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இந்த படத்தில் நான்கு ஹீரோக்கள், விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த்சாமி நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது வருகிறது. அப்படி நடந்து வரும் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்ப விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டி விடும் புகைப்படம் தற்போத இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் நான்கு ஹீரோக்கள் நடிப்பது போல ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனா்.

திரைப்படத்துறையின் போராட்டம் முடிந்து தற்போது நின்று போன படங்களின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ள நிலையில் செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதிக்கு சிம்பு உணவு விடும் காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நம்ம சிம்புவா இது என்று ரசிகா்கள் ஆச்சரியம் அடைய வைத்துள்ள இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அன்பாக பழக கூடியவா். இப்போது சிம்பும் அந்த வட்டத்தில் இணைத்த விட்டார் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. சிம்பு விஜய்சேதுபதிக்கு உணவு ஊட்டி விடுவதில் இருந்து தெரிகிறது இருவதும் மிகவும் நெருக்கமான நட்பு பாராட்டி வருகின்றனர். சிம்புவின் இந்த மனமாற்றம் அனைவரையும் ஆச்சரியபட வைத்துள்ளது.