மாதவன் நாயகி இப்போ அருள்நிதிக்கு ஹீரோயின்

shraddha datta

விஜய் சேதுபதி, மாதவன் இருவரும் இணைந்து நடித்த படம் விக்ரம் வேதா. சக்கைபோடு போட்ட இந்த படத்தில் மாதவனுக்கு மனைவியாக நடித்தவர் ஸ்ரத்தா தத்தா. தொடந்து கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் நிவின்பாலியுடன் நடித்திருந்த ரிச்சி படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்ததால் தமிழ பட வாய்ப்புகள் குறைந்தது

தற்போது மாதவனுடன் நடித்து கொண்டிருக்கும் ஸ்ரத்தா, அடுத்ததாக அருள்நிதியின் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தை பரத் நீலக்கண்டன் இயக்குகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.