‘மேரி கோம்’,’தோனி’, ‘சச்சின்’ போன்ற விளையாட்டு
வீரர்கள், வீராங்கணைகளின் வாழ்க்கை வரலாற்று
திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று
வெற்றியடைந்தது.

இதனைத் தொடர்ந்து, சாய்னா நேவாலின் வாழ்க்கை
வரலாற்றுப் படமாக்கப்பட உள்ளது.

பாலிவுட்டின் பிரபல இயக்குனரான அமோல் குப்தே சாய்னா
நேவாலின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குகிறார்.

சாய்னா நேவால் ஆசிய போட்டி, ஒலிம்பிக் போட்டி, சீன
ஓப்பன், காமன்வெல்த் என அனைத்திலும்
வெற்றிப்பெற்றுள்ளார்.

இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ, அர்ஜுனா,
ராஜிவ் காந்தி கேல் ரத்னா’ உள்ளிட்ட பல விருதுகளையும்
வென்றுள்ளார்.

சாய்னாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் பாலிவுட்
நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். இந்த படத்தின்
படப்பிடிப்பு கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம்
வெளியாகி, ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.