என்னையும், ராகவா லாரன்ஸ் மாஸ்டரையும்  தொந்தரவு செய்யாதீர்கள் என்று தெலுங்கு திரையுலகிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பல பிரபலங்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில மாதங்களுக்கு முன் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தனக்கு பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டதாக முன்பு ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்தார்.

இந்த புகாரை மறுத்த ராகவா லாரன்ஸ், மீடியா முன்பு ஸ்ரீ ரெட்டி ஆடிஷனில் கலந்து கொண்டு சிறப்பாக நடித்தால் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார்.

ஆனால் இப்போது இவர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இது குறித்து பேசிய நடிகை ஶ்ரீரெட்டி, சென்னைக்கு வந்த எனக்கு பட வாய்ப்பு கொடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். நான் அவரின் வீட்டிற்கு சென்றபோது அனைவரும் என்னிடம் அன்பாக நடந்த கொண்டனர்.

முன் நான் கூறிய புகாரை வைத்து இப்போது என்னையும், ராகவா லாரன்ஸ் மாஸ்டரையும் தொந்தரவு செய்யாதீர்கள் என தெலுங்கு திரையுலகினரை கேட்டுக்கொண்டுள்ளார் நடிகை ஶ்ரீ ரெட்டி.