சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் முடிந்துவிடும் நிலையில் தற்போது இந்த படத்தில் இன்னொரு பிரபலம் இணைந்துள்ளார். அவர்தான் ஷ்ரேயா கோஷல்

ஆம், இமான் இசையில் சீமராஜா படத்திற்காக ஒரு அருமையான பாடலை சமீபத்தில் பாடியுள்ளார் ஷ்ரேயா கோஷல். இதுகுறித்து இமான் தனது டுவிட்டரில் கூறியபோது இசையின் நைட்டிங்கேல் ஷ்ரேயா கோஷல் பாடிய மெலடி பாடல் மிக அருமையாக வந்துள்ளது. அவருக்கு எனது நன்றிகள் என்று கூறியுள்ளார்

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது. இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.