இதனால தான் இவரு… சந்தானத்துக்கு நாயகி

sritha

சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ கலெக்சனை தாருமாறாக அள்ளியது. இதனால் அப்படத்தை இயக்கிய ராம்பாலா துணிந்து இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்

தில்லுக்கு துட்டு-2 படத்தை பற்றி இயக்குனர் ராம்பாலா கூறுகையில், “தில்லுக்கு துட்டு-2, முதல் பாகத்தை விட ரசிகர்களுக்க மிகவும் ஜாலியாக இருக்கும். ‘சீரியஸ்’ ஆன திகில் காட்சிகள் நிறைய இருக்கும், இந்த கதைக்கு மலையாளம் பேசும் மலையாள பெண் நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.அதனால் மலையாள பட உலகில் பிரபலமாக இருக்கும் ஸ்ரீதா சிவதாஸ் தான் படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளோம்.

மேலும் மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் பிபின் ஆகியோர் காமெடி ரோலில் நடித்துள்ளனர். நாங்க ரெம்பவே கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கியுள்ளோம். முதல் பாகம் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. செப்டம்பர் வெளியீடாக படம் திரைக்கு வரும்.” என்றார்.