நடிகை ஸ்ரேயா தனது காதலரை திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. வதந்தியாக பரவி வருகிறது.

ஸ்ரேயா எனக்கு இருபது உனக்கு பதினெட்டு படத்தில் முதலில் நடித்தார். பின் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், சூப்பா் ஸ்டாருடன் சிவாஜி, மழை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 2 படங்களில் நடிக்கிறார். தமிழில் சொல்லும்படியாக படங்கள் எதுவும் இல்லை. நீண்ட இடைவெளிக்கு பின் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் பரவியது. மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற போது ரஷ்யாவை சேர்ந்த வாலிபரை ஸ்ரேயா சந்தித்தாகவும், அப்போது இருவருக்குமிடையே காதல் மலா்ந்ததாகவும், இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரிய அவா்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனா். வரும் மார்ச் மாதம் ஜெய்பூரில் அவரது ரஷ்ய காதலரை கரம் பிடிக்க இருப்பதாகவும் அதற்காக ஆடை, ஆபரணங்கள் ஆா்டா் செய்துள்ளதாக செய்தி வைரலாகி வருகிறது.

இது குறித்து அவா் கூறியதாவது, நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் செய்தி தவறு என குறிப்பிட்டார். ஸ்ரேயாவின் தாயார் நீா்ஜா இது பற்றி பேசியதாவது, ஸ்ரேயாவுக்கு திருமணம் என்ற செய்தி வெறும் வதந்தி தான். ஸ்ரேயாவின் தோழி திருமணம் ராஜஸ்தானில் நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்ள இருப்பதால் ஸ்ரேயா புதிய ஆடைகளும், நகைகளும் ஆா்டா் செய்திருக்கிறார். மேலும் நெருங்கிய உறவினா் திருமண விழாவிலும் பங்கேற்க உள்ளார். இந்த திருமண விழாக்கள் வருகிற மார்ச் நடக்க உள்ளதால் இப்படியொரு வதந்தி பரவியதற்கு காரணமாக கூட இருக்கலாம் என்று கூறினார்.